Saturday 9 November 2013

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பிராணன்

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பிராணன் 

முதலில் பிரதான அடுக்கான உடல்  பார்த்தோம். அடுக்கான பிராணன் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
 உடலில் உயிர் நிலைக்க பிராண அவசியம். நல்லவன்,கெட்டவன், உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என வேறுபாடின்றி யாவரும்  உயிர் வாழ்வது  பிராணனின் உதவியால் தானே.
இறைவழிபாடு,தியானம் செய்வதன் மூலம்  அதிக சக்தி பெறுகிறோம்.ஆனால் அந்த சக்தி நம்மிடம் பொருளாக வரவில்லை.சக்தி அலைகளாக வருகிறது.எனவே கண்ணால் காண முடியவில்லை.அந்த சக்தி  உடலில் எங்கேனும்,அல்லது வேறு எங்காவது வைத்துக்கொள்ளலாம்.அது  அப்படி வராமல் சக்தி அலைகளாக  பிராண சரீரத்தில் சேர்கிறது.எனவே பிராண சரீரம்  வலுவாக இருந்தால் மட்டுமே  வரும் சக்தியைச் சேமிக்கவும், தேவைக்கு அங்கிருந்து உபயோகப்படுத்தவும் செய்யலாம்.
உதாரணமாக ஒரு டம்ளரில் பெரிய பாத்திரத்தில் உள்ள  நீரை மேலிருந்து ஊற்றினால் அதில் மிக குறைவான நீர் மட்டுமே தங்கும்.வந்த தண்ணீர் அதிகம் ,நீர் ஊற்றப்பட்ட கிளாஸ்  மிக சிறியது .அது போல் உணவு,உணர்வு இவற்றில் முறையின்றி வாழும் நம்முடைய பிராண சரீரம் போதிய வலுவின்றியே இருக்கும்.


புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபோகும் முன் எப்படி அந்த வீட்டை ,தூசி தட்டி வெள்ளை அடித்து  வாழ தகுந்ததாக்கி அதன் பின் குடிஎருவோமோ அது போல் முதலில் நாடி ம்சுத்தி என்ற பயிற்சி செய்ய வேண்டும்.நமது உடலில் 72000 நாடி நரம்புகள் இருப்பதாக யோகசாஸ்திரம் கூறுகிறது.நாடி சுத்தி பயிற்சியின் மூலம் நாடிகள் தூய்மை அடைவதோடு ரத்தமும் சுத்தமாகும்.ஞாபக சக்தி கூடும்.முகத்தில் ஒளி உண்டாகும். நாடிகள் சுத்தமாகாமல் குண்டலினி யோகப் பயிற்சியில் இறங்கக்கூடாது என யோகநூல்கள் சொல்கின்றன.

நாம் அனேக தடவைகள் சில உறுதிமொழிகளை, குறிப்பாக ஒவ்வொரு புத்தாண்டின் போதும் அநேக முடிவுகளை எடுக்கிறோம்  ஆனால் மறு நாள் தூங்கி எழுந்ததும் அவற்றை மறந்து விடுவோம்.அல்லது அவற்றை தொடர்ந்து செய்ய மாட்டோம்.இதற்க்கு காரணம் வைராக்கிய குறைவு நல்ல பிராணசக்தி உள்ளவர்கள் மிகுந்த வைராக்கியம் உள்ளவர்களாகவும் எந்த செயலையும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இன்று அநேகர் பிராணசக்தியைக்  கொண்டு பல அற்புதங்கள் செய்கிறார்கள்.பிராண சக்தியினால் வியாதிகளைக்  குணமாக்குகிறார்கள்.

நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக  மூச்சை வெளியே விடுகிறோம்.சுவாசம் எப்போதும் மூக்கின் இரண்டில் ஒரு துவாரத்தின் வழியாகவே நடைபெறும்.அது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.

வலதுபக்கம் சூரிய கலை ,இடது புறம் சந்திரகலை எனப்படும்.
இடம் வலமாக,வலம் இடமாக மாறும்போது சில நொடி,நிமிடம் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் சுவாசம் நடக்கும் அதற்கு சுழுமுனை எனப் பெயர்.

 திங்கள்,புதன்,வெள்ளி,வளர்பிறை வியாழன்  நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை இடது புறம் சுவாசம் நடக்கும்.

செவ்வாய்,சனிக்கிழமை,ஞாயிறு,தேய்பிறை வியாழன்   நாட்களில்  அதிகாலை  4 முதல் 6 மணிவரை வலது புறம் சுவாசம் நடக்கும்.
பின் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.

சூரியகலை (வலது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-

கடினமான வேலைகள் செய்யலாம்,உணவு உண்ண ,மலம் கழிக்க ,உடலுறவில் ஈடுபட,கடல் யாத்திரை போக,சண்டையிட,கஷ்டமான கலைகள் கற்க,குதிரை,மாடு முதலிய நாளுகள் விலங்குகள் வாங்க,மலை ஏற ,பளு தூக்க,நீந்த,பணம் கொடுக்கல் வாங்கல் செய்ய, அரசன், பெரியமனிதர்களைக் காண,மருந்து சாப்பிட,செரிக்க கடினமான ஆகாரம் உண்ண,வைத்தியம் பார்க்க நன்று.

சந்திர கலை (இடது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-

எல்லா சுப காரியமும் செய்ய நன்று.நீர் அருந்த,தீர்மானம் செய்ய,நகை செய்ய நகை அணிய,புத்தாடை அணிய,திருமணம் பேச,பெண்பார்க்க, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள,வீடு கோயில் கட்ட,தர்மம் செய்ய,குளம்,கிணறு வெட்ட,வைத்திய சாஸ்திரம் கற்க,  மருந்து செய்ய,சாமான்கள் வாங்க,புதுவீடு குடிபுக,விதை விதைக்க,பாஷைகள் கற்க,நடனம்,பாடல் கற்க,நண்பர்கள் உறவினரை காண நன்று.

மேற்சொன்னவாறு காரியங்களை அந்தந்தக்  கலையில் சுவாசம் நக்கும் போது செய்ய வெற்றியுண்டாகும்.

சுழுமுனை நடக்கும் செய்யும் காரியம் தோல்வியடையும்.ஆனால் இறைவழிபாடு,தியானம் செய்ய மிகச்சிறப்பு.

சூரியகலையில் தம்பதியர் இணைந்தால் ஆண் குழந்தையும்,சந்திர கலையில் 
இணைந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.சுழிமுனையில் இணைந்தால் அலியாய்ப் பிறக்கும்.

ஏதேனும் வியாதி (உதாரணமாக :தலைவலி) ஏற்பட்டால் அது ஆரம்பித்த நிமிடம் எந்த பக்கமாக சுவாசம் ஓடுகிறது என பார்க்கவும் அதற்கு அடுத்த பக்கத்தில் சுவாசத்தை மாற்றினால் அந்த குறிப்பிட்ட வியாதி நீங்கிவிடும்.

மேலே சூரிய கலை,சந்திர கலையில் செய்ய காரியங்களை பற்றி கூறினேன்.உதாரணமாக நமக்கு சூரிய கலை நடந்து கொண்டிருக்கிறது ஆ னால் நாம் செய்ய வேண்டிய காரியம் சந்திர கலையில் செய்ய வேண்டியது .இதுபோன்ற தருணங்களில் என்ன செய்யலாம். அடுத்த பக்கம் மாறும் வரை எல்லா நேரங்களிலும் காத்திருக்க முடியாது

சுவாசத்தை மாற்றும் முறைகள்:-
1.மூச்சு ஓடும் பக்க அக்குளில்(வலது பக்கம் எனில் வலது கை அக்குள்) ஒரு துண்டை சுருட்டி மடித்து வைத்துக்கொண்டு  கையை பின்புறம் மடக்க கொள்ள  சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.

2.காலை மடக்காமல் மூச்சு ஓடும் பக்கம்  சாய்ந்து படுத்து அந்த பக்கத்து கையை தலைக்கு வைத்து படுத்திருந்தால் சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.

3.ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி,ஸ்ரீ புவனேஸ்வரி,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரத்தில் சித்தி பெற்றிருந்தால் அந்த சக்தியிடம் வேண்டினால் மூச்சு உடனே மாறும்.நான் இந்த முறையில் மூச்சை மாற்றுகிறேன்.


மேலே சொன்னவாறு ஒவ்வொரு பக்கம் மூச்சு ஓடும் போதும்  இழுக்கும் மூச்சை விட வெளிவிடும் மூச்சின் அளவு நமக்கு அதிகம்.அதுவும் சூரியகலையை விட சந்திர கலையில் அதிகமாக பிராணன் வீணாகிறது.எனவே யோகியர் சுழுமுனை அல்லது சூரிய கலையில் சுவாசம் வருமாறு வைத்துக்கொள்கிறார்கள்.இயல்பாக நஷ்டமாகும் பிராணன் போக பேசும் போது,கடின உழைப்பின் போது ,உடல் உறவு கொள்ளும் போது, தூங்கும் போதும் அதிக பிராணன் வீணானாலும் உறங்கும் நேரம் அதிகம் ஆகையால் உறக்கத்தின் போது பெருமளவில் பிராணன் நஷ்டமடைகிறது. எனவே சூரியகலையில் உறங்கினால் பிராண நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம். அதற்கு இடது கையைத் தலைக்கு வைத்து இடது புறமாகச் சாய்ந்து படுக்க வேண்டும்.மதிய உணவிற்குப்பின் பெரும்பாலோர் உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அவர்களும் இவ்வாறு உறங்கினால் சீக்கிரம் உண்ட உணவு ஜீரணமாகும்.

மேலும் சூரிய,சந்திர ,சுழுமுனை இவற்றை பயன்படித்தி ஆரூடம் சொல்லலாம்,பிறக்கப் போகும் குழந்தை ஆனா பெண்ணா என்று அறியலாம்,காணாமல் போன பொருள்,நபர்  வருமா வராதா மற்றும் அநேக காரியங்கள் செய்யலாம். விவரித்தால் அதிகம் போகும் எனவே இத்துடன் முடிக்கிறேன்.


நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக  மூச்சை வெளியே விடுகிறோம்.புது இரண்டு சக்கர வாகனம் எடுத்தவுடன் குறிப்பிட்ட கிலோமீட்டர் வரை 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் அப்போதுதான் அதற்கு  அதிக மைலேஜ் கிடைக்கும்.அதுபோல் நாடிசுத்தி மற்றும் பிராணாயாமம் செய்து வர வர அதிக சுவாசம் உள்ளே சென்று குறைந்த சுவாசம் வெளிச் செல்லும்.நமக்கு நிறைய பிராண சக்தி கிடைக்கும்.   


பிராண சரீரத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள்  :-

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
  
இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலை ,நள்ளிரவு என 4 வேளையும் செய்து வர பிராண சரீரம் மிக வலிமையுடன் திகழும்.
நாடி சுத்தியை குறைந்தது ஒரு மாதமாவது செய்து பின் மற்ற பிராணயாம பயிற்சிகளை செய்தல் நலம்.

பிராணயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக  மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.நேர்முகத்தேர்வுக்குக் காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய  மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

கபாலபாதி:-

இரு மூக்கு துவாரத்தின் வழியாகவும் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மூச்சை இழுத்தும்,வெளியிடவும் செய்யவேண்டும்.இதன் மூலம் கபாலம் எனும் தலையில் தங்கிய சளி வெளியேறும்.
ஒவ்வொரு வியாதி வரும் போதும் அது  நமக்கு முன்கூட்டியே
எச்சரிக்கை செய்துவிட்டுதான் வருகிறது.உதாரணமாக சளி பிடிக்கும் முன் தும்மல் வரும்,தொண்டையில் ஒரு மாதிரியான அரிப்பு வரும் அதை உணர்ந்து இந்த கபாலபதி பயிற்சியை 20 தடவை முதல் 30 தடவை வரை செய்ய சளி பிடிக்காது.இதை தொடர்ந்து செய்து வர சைனஸ் நீங்கும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி   எனப்பொருள்.

பற்களைச்  சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

சீத்தளி:-

நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

வெயிலில் எங்காவது அலைந்து நன்கு வேர்த்து விட்டால் வீடு அல்லது அலுவலகம் வந்து சேர்ந்ததும் இதைச்  செய்ய உடனே வியர்வை நிற்கும்.
உஷ்ணமான உடல் அமைப்பு கொண்டவர்கள் இந்த ப்ராணாயாமங்களை தினமும் செய்து வர உடலில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.உஷ்ண தேகமானால் அதிக காமம் உண்டாகும்,சிறுநீரோடு விந்து,நாதம் வெளியேறும்,பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உண்டாகும் அவை யாவும் இந்த ப்ரானாயாமத்தினால் தீரும்.ரொம்ப சோர்வாக உணரும் வேளைகளில் இதனை செய்ய உடனே சக்தி கிடைக்கும்.இரவில் விளித்து படிக்கும் மாணவர்கள் இதை சில தடவைகள் செய்ய உறக்கம் உடனே வராமல் சக்தியும் கிடைக்கும்.  
சீத்தளி,சீத்காரி இரண்டு ப்ராணாயாமங்களையும் மழை மற்றும் பனிக்காலங்களில் செய்ய வேண்டாம்.


பிரபஞ்ச ஆற்றல் ,பிராண சக்தி அதிகம் பெற பயிற்சி:-

நாக்கை ''ழ''  சொல்வது போல் மடித்து மேல் அன்னத்தில் படுமாறு வைத்துக்கொண்டு உச்சந்தலையில் உள்ள துரியத்தில் மனம் வைத்து தியானிக்க வேண்டும்.இதை அதிகபட்சமாக 20 நிமிடங்கள் செய்யலாம் அதற்கு மேல் செய்யவேண்டாம்.

இந்த பயிற்சி அநேக யோகிகளால் பயிலப்பட்டது.இதனை செய்ய உடனடியாக பிரபஞ்ச சக்தி நம் தலை வழியே நமக்குள் இறங்குவதை உணரலாம்.இது கர்ம வினை சார்ந்த நம் சிந்தனையில் ஏற்படும் குழப்பங்களை நேக்கும்.நம் செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும்.சித்தர் தரிசனம்  உண்டாகும்.அநேக ஆன்மீக அனுபவங்கள் உண்டாகும்.

மேலும் பயிற்சிகள் கற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

No comments:

Post a Comment