Tuesday 14 October 2014

மூலிகை சாப நிவர்த்தி மற்றும் பிராண பிரதிஷ்டை மந்திரங்கள்

                                                    
மூலிகைகள் தெய்வீக சக்தி கொண்டவை.அதுவும் நமது ஹிந்து தர்மத்தில் மூலிகை,செடி,மரம் இவை தெய்வ அம்சமாகவே பார்க்கப்படுகின்றன.

உதாரணம் :-

விநாயகர் - அருகம்புல்
சிவபெருமான்  - வில்வம்
அம்மன் - வேம்பு
விஷ்ணு - துளசி
ஹனுமான்  - வெற்றிலை,துளசி
துர்க்கை - வன்னிமரம்
அரசமரம் - விநாயகர்,திரிமூர்த்தி ஸ்வரூபம்

அந்த அந்த தெய்வங்களின் அருள் பெற குறிப்பிட்ட தெய்வத்திற்கு இஷ்டமான மரம்,செடியின் அருகில் தேவைக்கேற்ப திசை நோக்கி அமர்ந்து மந்திரம் ஜெபித்து அந்த செடியின் வேரடி மண்ணை பயன்படுத்திப் பல காரியங்களில் வெற்றி பெறலாம்.  (இந்த சக்தி வாய்த்த பிரயோகம் பற்றி எழுதினால் அதிகம் நீளும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்)  

பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள் ,ரிஷிமார்கள்,தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு.  எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.



மூலிகை பிடுங்கும் முன்னர் கன்னிப்பெண் நூற்ற நூல் கொண்டு அல்லது  மஞ்சள் தடவிய வெள்ளை நூல் கொண்டு காப்பு கட்டி எலுமிச்சம்பழம் படைத்துக்  குறைந்தது 3 நாட்கள் கழித்துப் பறிக்க சிறப்பு  என்று  மந்திர சாஸ்திரம் கூறுகிறது.சில குறிப்பிட்ட பிரயோகங்களுக்குக் குறிப்பிட்ட நாள்,நட்சத்திரம்,திதி , பட்சி  எல்லாம் பார்த்துச் செய்ய வேண்டும்.இங்கு நான் பொதுவான காரியங்களுக்குப் பயன்படுத்துவது பற்றி எழுதியுள்ளேன்.

குறிப்பிட்ட மூலிகையின் முன் கிழக்கு முகமாக நின்று கொண்டு கீழே உள்ள சாபநிவர்த்தி மந்திரத்தை 3 தடவை சொல்லிக் கொஞ்சம் விபூதியை அந்த மூலிகையின் மேல் போட்டு வணங்க வேண்டும்.
.
மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் 

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகஸ்தியர் சாபம் நசி நசி 
பதினென் சித்தர் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி  
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி 
   

 பின்னர் கீழே உள்ள ப்ராணப்ரதிஷ்டை மந்திரம் 3 தடவை ஜபித்து    சிறிது அருகம்புல்லை மூலிகையின் மேல் போட்டு வணங்கி எடுக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே மூலிகை மண்ணில் உயிர்ப்புடன்  இருந்த போது உள்ள அதே சக்தியுடன் .விளங்கும்.சோதனை செய்து பாருங்கள். சாதாரணமாகப் பறிக்கும்  மூலிகையை   விட சாபநிவர்த்தி மற்றும் ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் ஜெபித்து எடுக்கப்பட்ட மூலிகை நீண்ட நேரம் ,நாட்கள் வாடாமல் இருக்கும்.

ப்ராண பிரதிஷ்டை மந்திரம் :-

ஓம் மூலி மகாமூலி ஜீவமூலி உன்னுயிர் உன் உடலில் நிற்க சிவா 




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com





No comments:

Post a Comment