Monday, 26 December 2016

மயில் இறகின் மகத்துவம்

ஹிந்து தர்மத்தின் மிகச் சிறந்த ஞான மூர்த்திகளான இரு தெய்வங்கள் முருகனும் கிருஷ்ணனும்.கிருஷ்ணரை நினைத்தாலே ஞாபகத்திற்கு வருவது மயிலிறகும்,புல்லாங்குழலும் தான்.முருகனின் வாகனம் மயில்.
லட்சுமியும் மயில் மீது மிகுந்த பிரியம் கொண்டவளே.

மயிலைத் தூய்மை மற்றும் பாசிட்டிவ் சக்தியின் அம்சமாக நம் முன்னோர்கள் கருதினார்கள்.

மயில் இறகின் பயன்களைப் பற்றி மந்திர சாஸ்திர நூல்களில் விரிவாகப் பேசுகின்றன.அவற்றில் சிலவற்றை உங்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறேன்.

கிருஷ்ணன் தேய்பிறை ரோகிணியில் பிறந்தார் எனவே அவருக்குரிய பஞ்சபட்சி மயில்.அவர் தனது பக்ஷியான மயில் இறகைத் தலையில் எப்பொழுதும் அணிந்திருப்பார்.அதனால் அவர் களமிறங்கிய செயல்கள் அனைத்திலும் வெற்றியே கண்டார்.


1.மயில் இறகை நம்முடன் வைத்திருந்தால் கர கர என்ற குரலைக்கூட   எல்லோரும் விரும்பக்கூடிய வசீகரமானதாக குரலாக மாற்றும்.


2.வீட்டிலிலோ வீட்டு முகப்பிலோ வைப்பது வாஸ்து தோஷம் மற்றும் திருஷ்டி தோஷத்தைப் போக்கும்.


3.மயில் தோகையை காயத்துடன் வைத்துகே கட்டுப் போடக் காயம் விரைவில் ஆறும்.

4.எந்தக் காயத்திக்கும் மயில் இறகைத் தொட்டுத் தைலம் அல்லது எண்ணெய் போட்டு வர விரைவில் குணமாகும்.

5.சிறு அளவு மயில் இறகை எரித்துச் சாம்பல் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடலில் உள்ள விஷம் நீங்கும்.

6.சிறு அளவு மயில் இறகை எரித்துச் சாம்பல் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து காலை மாலை இருவேளையும் 1 மாதம் சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த பலமும்,போக சக்தியும் கிடைக்கும். 



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

No comments:

Post a Comment