Wednesday 23 September 2020

கணவன் மனைவி நல்வாழ்க்கை ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 27.9.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.30 முதல் 4.30 மணி வரை.

கணவன் மனைவி நல்வாழ்க்கை ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு  - 27.9.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.30 முதல் 4.30 மணி வரை.

 

இந்த வகுப்பு திருமணம் ஆனவர்களுக்கும்,இனி திருமணம் ஆக இருப்பவர்களுக்கும் நிச்சயம் ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்.
 
 

1.ஆண் மேல் பெண்ணுக்கும்,பெண் மேல் ஆணுக்கும் காதல்,கவர்ச்சி இவை பொதுவானவை.ஆனால்,ஏன் காதல் திருமணமாக மாறும் பொழுது ஆண்  பெண்ணையும், பெண் ஆணையும் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. அதனால் சண்டை சச்சரவில் ஆரம்பித்துப் பிரிவினை வரை செல்வது ஏன்? தவிர்ப்பது எப்படி ?


 
2.உண்மையில் ஒரு பெண்ணின் மனம் ஆணிடம் எதிர்பார்ப்பது என்ன, ஆணின் மனம் பெண்ணிடம் எதிர்பார்ப்பது என்ன ? என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத வரையில் வாழ்க்கை உண்மையாகவும்,மகிழ்ச்சியாகவும் இருப்பது கடினம்.
 
 
3.கணவன் இருக்கும் பொழுது மனைவியும்,மனைவி இருக்கும் பொழுது கணவனும் ஏன் கள்ளக்காதலில் ஈடுபடுகின்றனர்.
 
கள்ளக்காதலில் ஈடுபடும் அனைவரும் உண்மையில் காமத்திற்காக மட்டுமே அந்தச் செயலில் இறங்குவதில்லை.எந்த விஷயம் மனசாட்சியை ஒதுக்கி விட்டு அவ்வாறு செயல்பட வைக்கிறது ?.
 
இதற்குப் பின்னணியில் என்ன உள்ளது ? 
 
 
இதற்கான பதில் தெரிந்து விட்டால் திருமண உறவில் உண்டாகும் பிரச்சனைகளில்  பாதி தீர்ந்து விடும்.
 
 
4.காதல் திருமணம், பெற்றோரால் நடத்தி வைக்கப்பட்ட திருமணம்  என இரு வகையான திருமணத்தில் உங்கள் திருமணம் எந்த வகையான திருமணம். மேலும்,அந்தத் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாகக் கொண்டு செல்லச் செய்ய வேண்டியவை. 
 
 
 
5.திருமணம் என்பது ஒருவருக்கொருவர் உண்மையாகவும், உதவியாகவும், பிரியமாகவும்,ஒருவர் மகிழ்ச்சிக்கு ஒருவர் காரணமாகவும் இருக்கவே.
 
ஆனால், பெரும்பாலான தம்பதிகள் குழந்தைகள்,சமூகம், பொருளாதாரம்  போன்று சில காரணங்களால் வேறு வழியின்றி ஒரே வீட்டில் சேர்ந்து இருக்கிறார்கள்.ஆனால்,சேர்ந்து வாழ்வதில்லை.


ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பதும்,சேர்ந்து வாழ்வதும் வேறு வேறு.

 
 
6.திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வில் சில காலம் கழித்து உண்டாகும் வெறுமையைச் சகித்துக் கொள்ள முடியாமல் பல தவறுகளும்,உணர்வுச் சிக்கல்களும் உண்டாகின்றன.இதைச் சரிப்படுத்தச் செய்ய வேண்டியவை.
 
 
 
7.காமம் என்ற விஷயத்தைப் பொறுத்த வரையில் பெண்ணின் எதிர்பார்ப்பும்,  ஆணின் எதிர்பார்ப்பும்  என்ன என்று புரிந்து கொள்வது முக்கியம்.காமம் அல்லது காமத்தில் தன்னுடைய விருப்பம் பற்றிப் பெரும்பாலான இந்தியப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.காமம் தொடர்பான சில முக்கிய விஷயங்களைப் புரிந்து கொள்ளாததும் உறவுச் சிக்கல்களுக்கு முக்கியக் காரணம்.அதைப் பற்றிய தெளிவுகள்.
 
 
 
8.குழந்தை பிறப்பு,நல்ல குழந்தைகளைப் பெறுதல்,குழந்தைகளை  ஒழுக்கமாக, திறமையானவர்களாக வளர்ப்பதில் ஒரு பெற்றோராகத் தம்பதிகளின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்.
 
 
9.தம்பதிகள் ஒற்றுமையாகவும்,வளமாகவும் உதவும் மந்திரங்கள்.
 
 
தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றையும் செயல்படுத்துவதோடு  தம்பதிகள் ஒற்றுமைக்கான ஸ்லோகம் / மந்திரங்களை ஜெபித்து வந்தால் மட்டுமே நீண்டகாலப் பலன் கிடைக்கும்.மற்றபடி வெறும் வழிபாடு மட்டும் பலன் தராது.
 
 
 

நிறைவான மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு இவ்வளவு விஷயங்களையும்  பற்றிய அறிவும்,புரிந்துகொள்ளுதல் அவசியம்.எனவே, மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் பற்றித் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
 
 
 
வகுப்பு ஆபாசமாகவோ,கஷ்டமான விதிகளைக் கொண்டதாகவோ இருக்குமோ என்று பயப்பட வேண்டாம்.வகுப்பில் பேசப்படும் விஷயங்கள் நடைமுறை வாழ்வில் செய்து பார்த்துப் பலன் பெறக்கூடிய எளிய விதிகள் மட்டுமே.



இந்த வகுப்பில் சாத்தியப்பட்டால் தம்பதிகளாகக் கலந்து கொள்வது சிறப்பு.
 
 
ஏன் என்றால் இருவருக்கும் பொதுவான சில முக்கிய விஷயங்கள்  வகுப்பில் இடம் பெறும்.உங்கள் திருமண வாழ்வை மேலும் சிறப்பாக மாற்ற இருவரின் புரிந்து கொள்ளுதலும் அவசியம்.

 
வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

 

மேலும் தெளிவான,விரிவான விளக்கத்திற்குக்  கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும்.


https://www.youtube.com/watch?v=1cdah0RAupo

 

பயிற்சிக் கட்டணம் :RS.500

 

பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது கூகிள் பே  மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.


கூகிள் பே நம்பர் : 9442193072 - SURYA M


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404

IFSC CODE: SBIN0000932 


நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072

No comments:

Post a Comment