Saturday 12 May 2018

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மகிமை,மூலமந்திரம்,உபாசனை




சித்தர்களால் வாலைத்தாய்,வாலைக்குமரி என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாலாவின் வழிபாடு கல்வி,செல்வம்,வீரம்,நீங்காப் புகழ்,சித்தர் நிலை  இவற்றோடு தெய்வ நிலைக்கு உயர்த்த வல்லது.


பாலா மந்திரத்தில் வேதவழி முறை, சித்தர் வழிமுறை,தாந்த்ரீக வழிமுறை எனப் பல முறைகள் வழக்கத்தில் உள்ளன.

இந்த மந்திரத்திற்கு அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தேவியின் சாபம் உள்ளதால்,மந்திரத்தைக் குருவிடம் முறைப்படி தீக்ஷை பெற்று சாபநிவர்த்தி செய்து ஜெபித்தால் மட்டுமே உத்தம சித்தி கிடைக்கும்.

-------------------------------------------

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.

எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.

எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்குப் புரிந்தாலும் எவ்வாறு,நமக்குள் எங்கு உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது
(இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.


சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.


ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
பீஜம் என்றால் விதை  என்று பொருள்.விதைக்குள் எப்படி மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாகச் சொல்லப்படுகிறது.


ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஐம்|க்லீம்|சௌம்|


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி


முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.


மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

வாலையடி சித்தருக்குத் தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.


பாலா மந்திரம் மிக உயர்வான சித்திகளைத் தரக் கூடியது.



சக்தி உபாசனை கத்தி மேல் பயணம் போன்றது.வசீகர சக்தி,ஆண், பெண் வசீகரம் எல்லாம் தருவதால் பல நேரங்களில் வழி தவறிப் போகும் சாத்தியம் உண்டு அப்படிச் செயல்பட்டால் உங்கள் மந்திர ஆற்றல் விரயமாகி வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைச் சந்திக்க நேரும்.
எனவே,முறைப்படி குருவிடம் சாபநிவர்த்தி செய்யப்பெற்று தீட்சை 
பெற்று ஜெபிப்பதே விரைவான,நிறைவான பலனைத் தரும்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP  / TELEGRAMNO : 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment