Saturday 16 August 2014

ஸ்ரீ ஹனுமன் வழிபாடு


                              ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ||

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||


ஸ்ரீ ஹனுமன் சிவ அம்சம் சிவனது வீரியத்தில் இருந்து தோன்றியவர் எனவே இவரது சஹஸ்ரநாமத்தில் '' ருத்ர வீர்ய ஸமுத்பவாய '' என்றொரு நாமம் உண்டு.

ஸ்ரீ ஹனுமான் சிவபெருமானின் 11 அவதாரங்களில் ஒருவர்(ஏகாதச ருத்ரர்களில்) .
  
ஸ்ரீ ஹனுமானை மகான்கள் ராமாயணம் என்ற பெரிய மாலையில் உள்ள ரத்தினம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஸ்ரீ ஹனுமான் பிரம்மா சரஸ்வதி முதலான அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும்,பல சிறப்பான சக்திகளும்,தன்மைகளும் கொண்டவர்.
இராமாயண காலத்தில் ராமாவதார நோக்கம் பூர்த்தி அடைந்த பின் ராமர் ,சீதா முதலானோர் விண்ணுலகம் செல்லும் போது ஸ்ரீ ஹனுமன் ஸ்ரீ ராமரிடம் நான் உங்கள் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்த மண்ணிலேயே இருந்து விடுகிறேன் எனக் கூறி என்றும் சிரஞ்சீவியாய் இருந்து வருபவர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி,ஸ்ரீ மஹா வாராஹியைப்போல் ஸ்ரீ ஹனுமனும் விரைந்து அருள் செய்பவர்.

மாந்திரீகத்தில் இவரைக் கட்ட முடியாது.இவரைக்கொண்டு நியாயமான மற்றும் நல்ல காரியங்களை மட்டுமே செய்ய முடியும்.

இவருக்குத் தன் பலம் தெரியாததால் இவரைப் போற்றித் துதிப்பவர்களுக்கு மற்ற தெய்வங்களை விடச் சிறப்பான அருளை வழங்குவார்.இதன் காரணமாகவே "ஸ்தோத்ரப்பிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.

எல்லாத் தெய்வங்களைப்போல இவருக்கும் 108,1008 நாமங்கள் உள்ளன. இருந்தாலும் இவரது நாமங்களில் கீழ்க்காணும் 12 நாமங்கள் பிரசித்தி வாய்ந்தவை அவற்றைத் தினமும் அதிகாலையில் ஜெபித்து வருவது அவர் அருளை நிறைவாய்ப் பெற்றுத்தரும்.

1.ஹனுமத் த்வாதச நாமங்கள் :-

ஹனுமான்
ஆஞ்சநேயன்
வாயுபுத்திரன்
மகாபலிஷ்டன்
ராமேஷ்டன்
அர்ஜுனசகன்
பிங்காக்ஷன்
அமிர்தவிக்ரமன்
சமுத்திரத்தைத் தாண்டியவன்
சீதாசோகவிநாசகன்
லக்ஷ்மணப்ராண  ரக்ஷகன்
ராவணனின் கொழுப்பைப் பரிகாசம் செய்தவன்



தினமும் குளித்து முடித்து மேற்கண்ட இவரது பன்னிரு திருநாமங்களை ஜெபித்து  வர இவர் அருளைப் பூரணமாகப்  பெறலாம்.மேலும்,இந்த நாமங்களை யாத்திரையின் போதும்,ஆபத்தான தருணங்களிலும்,பயம் கொண்ட நேரத்திலும் ஜெபித்து வேண்டக் காவலாய் விளங்குவதோடு காரிய வெற்றியும் தரும்.


2. ஸ்ரீ ஹனுமான் ராம பக்தருள் சிறந்தவர். மேலும் இவர் தன்னை வணங்குபவர்களை விட ஸ்ரீ ராமரை வணங்கி அவர் நாமத்தைப் பாடுபவர்களுக்கு சிறப்பான பலன்களை நல்குவார்.எனவே .அதிகாலையில் குளித்த பின்னர்  "ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" என்று குறைந்தது 27 தடவையும், அதிகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபித்து வர இவர் அருளைப் பூரணமாகப் பெறலாம்.


3.ஆபத்தான தருணங்களில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஜெபித்து அவரை வேண்ட ஆபத்துகள் விலகும்.

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 

ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||




4.பாதுகாப்பான பயணத்திற்கு :- 

தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும்,தனிமையில் பயணம் செய்யும் போது பயம்,ஆபத்து நீங்கவும்,அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப  ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .

அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித |
பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே  ஸதா|| 






வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment