Sunday, 4 January 2015

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரங்கள் : பாகம் 1

                            


                                      ஓம் ஸ்ரீ சாய் நாதாய நமஹ 

கூப்பிட்ட குரலுக்கு உடன் வந்து அருள் செய்பவர்கள்  ஸ்ரீ சாய்பாபா மற்றும் வள்ளலார் என்று பல்வேறு ஆன்மீக  மற்றும் மறைபொருள் ஆய்வாளர்கள்   தெரிவிக்கின்றனர்.( ENSURED BY A LOT OF SPIRITUAL RESEARCHERS & MYSTICS )


ஷீரடி சாய்பாபா சிறந்த வரப்ரசாதி எனவே அவர் மத பேதமின்றி அனைத்து மக்களாலும் வழிபடப்படுகின்றார்.இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா தவிர்த்த பிற மாநிலங்களில் பெருமளவில் இவர் வழிபாடு இருந்தது ஆனால் இப்போது தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் சாய்பாபா வழிபாடும் ,ஆலயங்களும்  பெருகி வருகின்றன .

இங்கு சாய்பாபாவின்  மந்திரங்கள் சில உள்ளன,உங்களுக்கு எது பிடித்தமாக உள்ளதோ அதை ஜெபித்து வழிபடவும்.

                                                 ஸ்ரீ ஷீரடி சாய்பாபா காயத்ரி 

                                            ஓம் ஷீரடி வாசாய வித்மஹே 
                                                   சச்சிதானந்த தீமஹி 
                                            தன்னோ சாய் ப்ரசோதயாத் 

சாய்பாபா அருட்பிரசாதமாக வழங்கப்படும் உடி எனப்படும் விபூதி மிகச் சக்தி வாய்ந்தது.இருந்தாலும் கீழே உள்ள மந்திரம் சொல்லி வைத்துக் கொள்ள எல்லா துன்பங்களில் இருந்தும் காக்கும் ரக்ஷையாக விளங்கும்.


1.சாய் விபூதி மந்திரம்
மஹோ க்ராஹ பீடாம்  மஹோத் பாத பீடாம் |
மஹா ரோக பீடாம் மஹா தீவ்ர பீடாம் |
ஹரத்யாசுதே த்வாரகாமாயி பஸ்ம நமஸ்தே |
குரு ஸ்ரேஷ்ட சாயீஸ்வராய |
ஸ்ரீகரம் நித்யம் சுபகரம்  பரமம் பவித்ரம் |
மகாபாபஹரம் பாபா விபூதிம் தாரயாம்யஹம் |
பரமம் பவித்ரம் பாபா விபூதிம் |
பரமம் விசித்ரம் லீலா விபூதிம் |
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதாதிம் |
பாபா விபூதிம் இதமஸ்ரயாமி |
சாய்  விபூதிம் இதமஸ்ரயாமி |
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாதாய  நமஹ ||

   
மேலே கண்ட மந்திரம் சொல்ல கஷ்டமாக இருந்தால் கீழே உள்ள மந்திரம் சொல்லி விபூதி அணியலாம்.

2.சாய் விபூதி மந்திரம்

பரமம் பவித்ரம் பாபா விபூதிம் |
பரமம் விசித்ரம் லீலா விபூதிம் |
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதானம் |
பாபா விபூதிம் இதமஸ்ரயாமி |


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment