Monday, 5 January 2015

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரங்கள் : பாகம் 2

                                                  ஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ  



ஸ்ரீ ஷீரடி சாய்பாபா தியான மந்திரம் :-

நமாமி சாய் குரு பாத பங்கஜம் |
கரோமி பாபா தவ பூஜனம் வரம் |
வதாமி சாய் சுப நாம நிர்மலம் |
ஸ்மராமி பாபா தவ தத்வ மவ்யயம் |
சச்சிதானந்த ரூபாய பக்தானுக்ரஹ காரினே |
ஷீரடின்யாய ஸ்தைகதேஹாய ஷாயீஷாய நமோ நமஹ |
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய சர்வதாயச்ச விஷ்ணவே |
ஸ்ருஷ்டீச்ச த்ரிஸ்வரூபாய சாயிநாதாயதே  நமஹ|
சாய் சாயிதி சாயிதி ஸ்மர்தவ்யம் நாம சஜ்ஜனயே|
சஹஸ்ர நாம தத்துல்யம் சாயி நாம வரப்ரதம் |
ஸ்ரீ சாயிதி சதா ஸ்நானம் |
ஸ்ரீ சாயிதி சதா ஜபஹா |
ஸ்ரீ சாயிதி சதா த்யானம் |
 சதா சாயிதி கீர்த்தனம் ||       


ஆபத் நிவாரண சாய் மந்த்ரம் :-

ஆபத்தான தருணங்களில் அல்லது ஆபத்துக்கள் ஏற்படும் என்று பயம் ஏற்பட்டாலோ  இந்த மந்திரத்தை சாய்பாபா படத்தின் முன் அமர்ந்து அல்லது அவரை நினைத்து ஜெபித்து வர ஆபத்துக்கள்,விபத்துக்கள்,எதிரிகளால் உண்டாகும்  துன்பங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பரப்ரம்ம கீ ரூப ஜோ ஜக் கோ சனாத் ||
சோ ஹமாரி ரக்ஷா கரே ஜகத் குரு சாயிநாத் ||

தொலை தூரப் பயணம் ,குழந்தைகள் பாதுகாப்பு என எந்த சூழ்நிலையிலும் இதை ஜெபித்து விபூதி அணிந்து அவரை வேண்டிக் கிளம்ப அவர் அருள் ரக்ஷையாக நின்று காக்கும்.


காரியத் தடை நீங்க :-
எந்த ஒரு காரியம் செய்யும் முன்னர் விநாயகரை வேண்டி கீழே உள்ள ஸ்லோகம் சொல்லி ஸ்ரீ சாய்பாபாவையும் வேண்டி காரியம் த்தொடங்க காரியத்தடைகள் நீங்கி சிறப்படைவீர்கள் .

ஸ்ரீ கணேசாய நம |ஸ்ரீ சாயிநாதாய நம மம கார்ய நிர்விக்னமஸ்து ||


குறிப்பு :-
சாய்பாபா அதிகமாக ஜெபித்த சித்தி பெற்ற மந்திரம்

"அல்லா மாலிக்".

அவர் சமயபேதம் அற்றவர்.ஆனால் ,அவர் சித்தி பெற்ற "அல்லா மாலிக்" என்ற மந்திரத்தை எல்லோரும் அப்படியே ஜெபிக்க வேண்டாம். சூஃபி வழிமுறையில் (இஸ்லாமிய ஞான வழி ) மந்திரங்களை முறைப்படி ஒரு சூஃபி குருவை அணுகித் தீக்ஷை பெற்ற பின்னரே ஜெபிப்பது சிறப்பு.
ஏன் என்றால் மந்திர உரு ஏற ஏறச் சில எதிர்பாராத அனுபவங்கள் அல்லது ஆன்மீகத்தில் வேறு உயர்ந்த படித்தரங்களையோ பெறலாம்.எல்லோருக்கும் அது ஏற்புடையதாக இருக்காது.

மேலும்,சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment