Wednesday, 14 January 2015

ஸ்ரீ ஹனுமன் உடல்கட்டு மந்திரம்

                                         ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்
                ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம் || 
                  ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் || 




சாத்வீக மந்திரம் தவிர்த்த பிற வகையான ராஜச மற்றும் தாமச தெய்வ மந்திர உபாசனை மற்றும் பூஜையின் போது எதிர்பாராத சில ஆபத்துக்கள் அல்லது துஷ்ட சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம்.அதைத் தவிர்க்க உடல் கட்டு மந்திரம் ஜெபித்த பின் மந்திர ஜபம் செய்வது பாதுகாப்பானது.

முதலில் ஊதுபத்தி ஏற்றி வெற்றிலைப் பாக்கு ,வாழைப்பழம் ,கொய்யாப்பழம் படைத்து முன்னால் ஒரு டப்பியில் விபூதி வைத்துக் கொண்டு மந்திரத்தை 1008 தடவை ஜெபித்துச் சித்தி செய்து கொள்ளவும்.பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபித்துச் சிரசிலும்,நெற்றியிலும், மார்பிலும் விபூதி அணிந்து கொள்ளக் காப்பாக விளங்கும்.குளக்கரை,நதிக்கரை,கடற்கரையில் மந்திரத்தைச் சித்தி செய்வது சிறப்பு.


உடற்கட்டுக்கு மட்டுமின்றி பயந்த குழந்தைகள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த விபூதியைப் பூசி வர அவற்றின் பாதிப்புகள் நீங்கும்.இரவில் தனியாக உறங்கப் பயப்படுபவர்கள் இதை ஜெபித்து நெற்றியில் விபூதி பூசி உறங்கப் பயமற்ற உறக்கம் உண்டாகும்.


மந்திரம்:-

ஓம் நமோ பரமாத்மனே அஞ்சனாசுதாய |
ஹும் ஹும் ஹும் மம சரீரம் பந்தனம் |
ரக்ஷ குரு குரு ஸ்வாஹா ||  



                                 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

4 comments:

  1. This Mantra you have to tell on Surya Grahana or the days equal to Surya Grahana like Shukala Pakhasa bhanu sapthami or Shukala Pakhaaa Budha Astamai,or Monday Ammavasaya.Then, Manthra siddhi you got.

    ReplyDelete
  2. Nanbare vanakkam enakku pei virattum manthiram book venum eppadi vanguvathu

    ReplyDelete