டாய்லெட் அமைப்பு :-
பெங்சுயி வாஸ்துவில் பணம் ஜலத் தத்துவத்தோடு தொடர்புடையது.எனவே கடை,வீடு,தொழிற்சாலைகளில் தேவையின்றி நீர் செலவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.குழாய்கள்,தொட்டிகளில் லீக்கேஜ் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும்.
குளியல் அறை மற்றும் டாய்லெட் இவற்றில் நீர் தொடர்ந்தும் அதிகமாகவும் வெளியேறுவதால் டாய்லெட்டை பீரோ,பணப்பெட்டி ,அடுப்பறை,ஸ்டோர் ரூம் இவற்றின் அருகில் அமைக்கக்கூடாது .
டாய்லெட் வீட்டின் பிரதான நுழைவாயிலின் அருகிலும் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் அடிக்கடி உடல் நலக்குறைவு,தீரா நோய்கள் ,கையிருப்புக் குறைவு ,பணப்புழக்கம் இன்மை ஏற்படும்.
மாடிப்படியின் கீழும் அமைக்கக்கூடாது .அவ்வாறு அமைத்தால் அடிக்கடி வயிற்றில் நோய்,வலி உண்டாகும்.
மாடிப்படியின் கீழும் அமைக்கக்கூடாது .அவ்வாறு அமைத்தால் அடிக்கடி வயிற்றில் நோய்,வலி உண்டாகும்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
No comments:
Post a Comment