Wednesday, 17 September 2014

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 5


சமையல் அறை அமைப்பு:-

நமது சமையல் அறையின் அமைப்பு நிதிநிலையின் தன்மையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

பிரதான வாசலுக்கு நேர் எதிரே சமையல் அறை அமைக்கக்கூடாது. ஏனென்றால் பிரபஞ்ச சக்தி பிரதான நுழைவு வாயில் வழியாகவே வீட்டினுள் வருகிறது.எனவே மேற்கண்டபடி சமையல் அறை அமைந்தால் பிரபஞ்ச சக்தி நெருப்பில் கலந்து கரைந்து விடும்.செல்வம் சந்ததி என எல்லா நிலைகளிலும் விருத்திக் குறைவு ஏற்படும்.


வீட்டின் மையப் பகுதியில் சமையல் அறை அமைந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்யத்தைக் கெடுக்கும்.

அடித்தளத்தில் (BASEMENT) அமைந்தால் பெண்களின் உடல்நிலையைப் பாதிக்கும். 


தவிர்க்கமுடியாத காரணத்தினால் அல்லது இடமின்மையால் மேற்கண்டவாறு சமையல் அறை அமைந்திருந்தால் சமையல் அறையில்  கதவு ஜன்னல்களில் திரைச்சீலையும், 5 குழல்களால் ஆன காற்று மணியும் WIND CHIME தொங்கவிடவும்  (படம் இணைக்கப்பட்டுள்ளது) அமைக்கவும்.இது எதிர்மறையான பாதிப்புகளைக் குறைக்கும்.

அடுப்பு - சமையல் அறையின் பிரதான வாயிலை நோக்கியபடி எளிதில் பார்வையில் படும் வண்ணமும் வைக்கப்படவேண்டும்.

சிங் மற்றும் கேஸ் சிலிண்டர் ஒரே திசையில் அருகருகே வைக்கப்படக் கூடாது.சிங் சமையல் அறையின் வடக்கு பக்கம் வைக்கப்படவேண்டும்.அப்படி இயலாத பட்சத்தில் தெற்குத் திசை தவிர மற்ற திசையில் அமைக்கலாம். 


காஸ் சிலிண்டர் - அக்னி தத்துவத்தின் திசையான தெற்குத் திசையில் வைக்கப்படவேண்டும்.

டைனிங் டேபிள்  - சமையல் அறையின் தெற்குப்பக்கம் இருக்கவேண்டும்.
கண்ணாடி மற்றும் உலோகத்தினால் ஆனதைவிட மரத்தினால் செய்யப்பட்ட டைனிங் டேபிள் சிறந்தது.அது வட்டம் ,சதுரம்,செவ்வகம் என ,இருக்கலாம்.
உத்தரத்தின் கீழ் அமைக்கக்கூடாது.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


5 குழல்களால் ஆன காற்று மணியும் WIND CHIME AND MODEL KITCHEN 





No comments:

Post a Comment