Saturday 27 December 2014

ஜைனர்களின் காவல் தெய்வம் ஸ்ரீ கண்டாகர்ண மஹாவீர் வழிபாடு





கண்டாகர்ண மஹாவீர் ஜைனர்களின் ( சேட் ) காவல் தெய்வம்.ஜைன மதத்தின் 52 காவல் தெய்வங்களில் இவர் 30 வது தெய்வமாக வருகிறார்.இவர் மணியோசையை விரும்புபவர்.மணிபோன்ற காது உடையவர். எதிரிகளால், தீய சக்திகளால் ஏற்படும் எந்த விதமான கஷ்டங்களில் இருந்தும் விடுபட இவரை வழிபடலாம்.இவர் வழிபாடு விரைவில் பலிதமாவதுடன் அற்புதமான பலன்களையும் தரும்.  அசைவம் சாப்பிடுபவர்களுக்கு இவரது மந்திரம் பலிக்காது. அதிகமாக உருவேற்றினால் காட்சி தருவார் அத்துடன் வாழ்வில் நடக்கப்போகும் பல சம்பவங்கள் முன்கூட்டியே கனவில் தெரிந்து விடும்.

கோதுமை மாவு,நெய் கலந்து செய்யப்படும் இனிப்புப் பலகாரம் இவருக்குப் பிரியமானது.முடியவில்லையானால் பூந்தி அல்லது லட்டு படைக்கலாம்.


1. ஸ்ரீ கண்டாகர்ணர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அருளும் ஒன்றாகச் சேர்த்துத் தரும் விருப்பங்களை நிறைவேற்றும் மந்திரம் :-

நாமன் த்ரோஸ்தி தே  சித்தஹா சர்வ மங்களகாரகா||இஷ்ட சித்திம் மஹா சித்திம் ஜெயம் லக்ஷ்மீம் விவர்தய ||

வளர்பிறை வெள்ளிக்கிழமை மாலை இந்த மந்திரம் ஜெபிக்கத் தொடங்கி
தினமும் 108 தடவை ஜெபித்து வர பிரச்சனைகளற்ற,வளமான வாழ்வு கிட்டும்.


2.வியாதிகள், விபத்துகள்,பயம் நீங்க  :-

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் |கண்டாகர்ண மகாவீர் |சர்வ வியாதி வினாசக|ஆதிம் வ்யாதிம் விபத்திம் ச மஹாபீதிம் வினாஷய ||

தினம் 108  உரு ஜெபித்து வர வியாதிகள்,பயம்,விபத்துக்களில் இருந்து பாதுகாப்பு கிட்டும்.ஜாதகப்படி வியாதிகள்,விபத்துக்கள் உண்டாகக் கூடிய அமைப்பு  உள்ளவர்கள்  இம்மந்திரத்தை 108 உரு ஜெபித்துச் சிகப்புக் கயிற்றில் ரக்ஷை முடிந்து கட்ட  வியாதிகள்,விபத்துக்கள் ஏற்படாது.



3.எதிரிகளையும் தீய எண்ணம் கொண்ட மனிதர்களையும் வெற்றி கொள்ள :-

த்வச் ச்ரத்த பக்தி யோகேன பவந்து சர்வ சக்த்யஹா ||பரபவன் து துஷ்டாஸ்ச்ச சத்ரவோ வைரி துர்ஜனா ||

செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள்  அல்லது மதியம் 11:45 முதல் 12:30 க்குள் இந்த மந்திரத்தை ஜெபித்து வர எதிரிகளாலும் தீய எண்ணம் கொண்ட மனிதர்களாலும் துன்பம் நேராது காக்கப்படும்.


4.கொடிய வியாதி,மனக்குழப்பம் ,பெருந்துன்பங்கள் தீர :-

ஆபத் காலேஷு மாம் ரக்ஷ மம புத்திம் ப்ரகாசய |சர்வோ பத்ரவதோ ரக்ஷ கோர ரோகம் வினாசய ||

மனக்குழப்பம் ,பெருந்துன்பங்கள் உள்ள வேளையில் இம்மந்திரத்தை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வர அதில் இருந்து விடுபடும் வழி மனதில் புலப்படும்.
கொடிய வியாதியால் அவதிப்படுபவர்கள் இம்மந்திரத்தை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வர விரைவில் நோயின் தீவிரம் குறையும்.


5.உடல் மன பலம்,செல்வவளம்,புத்திக்கூர்மை பெற:-

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் |கண்டாகர்ண மஹாவீர் | தன சம்ரித்திம் ப்ரவர்த்தய |
ராஜ்யம் ச ராஜ்யமானம் ச பலம்  புத்திம் ப்ரவர்த்தய ||


வட இந்தியர்கள் இம்மந்திரத்தை அதிகம் ஜெபித்து பெரும் செல்வந்தர்களாக விளங்குகிறார்கள்.கடை அல்லது தொழிற்சாலையைத் தினமும் திறக்கும் பொழுது அல்லது ஊதுபத்தி காண்பித்து இம்மந்திரத்தை ஜெபிக்க  செல்வம் பெருகும்.தொழில்,வியாபாரம் செழிக்கும்.எப்படிச் செல்வத்தைப் பெருக்கலாம் என்ற புத்திசாலித்தனம் உண்டாகும்.வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் இம்மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கவும்.      

இன்னும் இவர் தரிசனம் பெற ,காணாமல் போன பொருள் ,இழந்த செல்வம் திரும்பப்பெற,பேய்,பிசாசு ,தீய சக்திகளின் தொல்லை தீர எனச் சில மந்திரப்  பிரயோகங்கள் உள்ளன,பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.
     

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment